April 14, 2026

நான் அடிமை இல்லை

நான் அடிமை இல்லை (ஒரு மலேசியத் தமிழன் கதை) தமாம் பாலா

கண்ணன் என்ற கருணாகரன் நான். எட்டு கோடி தமிழர்களுக்கு எட்டாத தொலைவில் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவன். பிறந்து ஏழுநாள் வரை தாய் இருந்தாள், ஏழு வயது ஆனபோது தந்தை இறந்தார். அவர்கள் இன்னும் என் நினைவில் மட்டுமே வாழ்கின்றனர்.

தம்பி உன் குலதெய்வம் என்ன என்று அவர்கள் கேட்ட போது, அவர் என் குலத்தை கோத்திரத்தை ஆராய்கிறார் என நான் அறிந்த போது எனக்கு பதினாறு வயது. முகம் பார்க்கும் கண்ணாடியே என் குலதெய்வம் என்றேன், அவர் வாயடைத்து நின்றார்.

இப்போது நான் ஒரு நீதிபதி. தமிழ் தொலைக்காட்சி தொடரில் அல்ல. பறங்கியர் தமிழரை மலேசிய நாட்டுக்கு அழைத்து வந்து தோட்டத்தொழிலில் அடிமையாய் நடத்தியது அந்தக்காலம். அதே பறங்கியர் ஊரில் ஒரு நாள் முதல்வனாய், கவுரவ நீதியரசராய் காலம் என்னை இன்று அலங்கரித்து மகிழ்கிறது.

நான் அடிமை இல்லை, நீங்களும் தான். நம் கதை தொடரட்டும், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ!

I am not a slave (A Malaysian Tamil story) Dammam Bala

I am Kannan, a Karunakaran. I was born and raised in Malaysia, far from the reach of eighty million Tamils. My mother was there for seven days after my birth, and my father died when I was seven years old. They still live only in my memory.

When they asked me what your clan deity was, I was sixteen years old when I learned that he was examining my clan and tribe. I said that the mirror that sees my face is my clan deity, and he kept his mouth shut.

Now I am a judge. Not in a Tamil TV series. That was the time when the Parangiyar brought the Tamils ​​to Malaysia and treated them as slaves in the plantation industry. Time has adorned me today and is happy to be the chief and honorary justice of the same Parangiyar village for a day.

I am not a slave, you are too. Let our story continue, Happy Tamil New Year, brother!

March 10, 2026

கனவே கலையாதே, அமீரகம் (வாட்ஸப்)


காலியான வீதிகள்.. விழி பிதுங்கும் தொழிலதிபர்கள்.. ஆள் இல்லாத "அமீரகம்".. கோஸ்ட் டவுன் துபாய்!

கட்டியது வெளிநாட்டவர்... வாங்கியது வெளிநாட்டவர்... இன்று பயந்து ஓடுவதும் அதே வெளிநாட்டவர்தான்!"..அரபு தேசத்தின் 'வளர்ச்சி' மந்திரம் இப்போது அஸ்தமிக்கிறதா? என்ற விவாதம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

பல தசாப்தங்களாக, "எண்ணெய் வளம் தீர்ந்தாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகளை வைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைப்போம்" என மார்தட்டிய அமீரகத்தின் வியூகம், இன்று அவர்களுக்கே வினையாக மாறியிருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் முழுக்க முழுக்க 'வெளியாட்களை' மட்டுமே நம்பி இருந்தால், ஒரு சிறிய சலனம் கூட எத்தகைய சுனாமியை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போதைய துபாய் ஒரு நேரடி சாட்சி.

வெளிநாட்டவர் தயவில் ஒரு சாம்ராஜ்யம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality) மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய மூன்று தூண்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவை வைத்தே வடிவமைக்கப்பட்டவை. சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் வரை அனைத்தும் 'விசிட்டர்களை' குறிவைத்தே கட்டப்பட்டன. ஆனால், இன்று ஈரான் போர், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.

"Boots on the ground" என்று சொல்லப்படும் நேரடி வாடிக்கையாளர்கள் இல்லாததால், அங்குள்ள தொழில்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. ஓட்டல்கள் காலியாக உள்ளன; மால்களில் ஈ ஓட்டாத குறைதான்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் நீண்டகாலமாக சுற்றுலா மற்றும் அந்நிய முதலீடுகளை நம்பியே கட்டமைக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் துபாய் மட்டும் சுமார் 1.96 கோடி (19.59 மில்லியன்) சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து சாதனை படைத்திருந்தது. இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த வளர்ச்சி பெரும் சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, Oxford Economics போன்ற நிறுவனங்களின் கணிப்புப்படி, 2026-ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 11% முதல் 27% வரை குறையக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 12% முதல் 13% வரை பங்களிக்கும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை நேரடியாகப் பாதித்து, பில்லியன் கணக்கிலான டாலர் இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ஏன் இந்த வீழ்ச்சி?

அதிகப்படியான சார்பு: ஒரு நாட்டின் உள்நாட்டுத் தேவை (Domestic Demand) வலுவாக இருக்க வேண்டும். ஆனால் அமீரகத்தில், வாங்குபவரும் அந்நியர், விற்பவரும் அந்நியர் என்கிற நிலை நீடித்தது.

பாதுகாப்பு அச்சம்: சமீபத்திய அரசியல் பதற்றங்கள் காரணமாக, "துபாய் பாதுகாப்பான புகலிடம்" என்கிற பிம்பம் சிதைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

வெறிச்சோடும் ரியல் எஸ்டேட்: 'கட்டினால் விற்றுவிடும்' என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இன்று வாங்குவாரின்றி கிடக்கின்றன.

ஒரு நாடு என்பது மண்ணின் மைந்தர்களாலும், நிலையான உள்நாட்டு உற்பத்தியாலும் பலப்பட வேண்டுமே தவிர, வெறும் 'மிதக்கும்' மக்கள் தொகையை (Floating Population) வைத்து கட்டப்படும் கோட்டைகள் நீண்ட காலம் நிலைப்பதில்லை. துபாய் இன்று சந்திக்கும் இந்த 'சைலண்ட்' நெருக்கடி, உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான பாடம்.

வெளிநாட்டவர்கள் கட்டியெழுப்பிய இந்த சொர்க்கம், இன்று அவர்களாலேயே கைவிடப்படும் சூழலில், அமீரகம் தனது பொருளாதாரப் பாதையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையேல், அந்த வானளாவிய கட்டிடங்கள் வெறும் 'கான்கிரீட் காடுகளாக' மட்டுமே எஞ்சி நிற்கும்!

March 9, 2026

எத்தனை முறை நீங்கள்? (நன்றி வாட்ஸப் பல்கலைக்கழகம்)

எத்தனை முறை நீங்கள் தேவையில்லாதவர்களுக்காக
உங்களையே இழந்திருக்கிறீர்கள்? 😔
இனி அது வேண்டாம்... இதை படியுங்கள்!

1️⃣ யாரையும் தேடி அலையாதீர்கள் 🚫

உங்கள் அன்பை யாரோ ஒருவர் பெற வேண்டும் என்று
தேடி தேடி சோர்ந்து போகிறீர்களா?

நிறுத்துங்கள்!

உண்மையான மனிதர்கள் தேட வேண்டியதில்லை —
அவர்கள் தானாகவே உங்கள் வாழ்க்கையில் வருவார்கள்!

நீரை தேடி மீன் அலைவதில்லை —
நீரே மீனை தழுவுகிறது!

நீங்கள் சரியானவராக இருங்கள் —
சரியானவர்கள் தேடி வருவார்கள்! 🌊

2️⃣ யாரையும் இருக்கச் சொல்லி கெஞ்சாதீர்கள் 💔

போக நினைப்பவரை பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறீர்களா?

இது மிகவும் வலிக்கும் உண்மை —
போக விரும்புபவரை நிறுத்த முடியாது!

கெஞ்சினால் அவர்கள் தங்கலாம்...
ஆனால் மனதால் போய்விட்டார்கள்!

உங்கள் மதிப்பை உணராதவர்களை
கெஞ்சி வைத்திருக்க வேண்டாம்.

விடுங்கள்... விடுதலை பெறுங்கள்! 🕊️

3️⃣ உங்கள் மதிப்பை நீங்களே அறியுங்கள் 👑

யாரோ உங்களை புறக்கணித்தால்
உங்கள் மதிப்பு குறைந்துவிடவில்லை!

வைரத்தின் விலை யாரும் வாங்காவிட்டாலும் குறையாது!

நீங்கள் யாருக்காக என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை —
நீங்கள் யார் என்பதே உங்கள் மதிப்பு!

உங்களை நீங்களே மதியுங்கள் —
உலகம் மதிக்கும்! 💎

4️⃣ முக்கியமானவர்களுக்கு இடம் வையுங்கள் ❤️

உங்கள் நேரம் மதிப்புமிக்கது!
உங்கள் சக்தி அளவற்றது இல்லை!
உங்கள் மனம் இடம் வரையறுக்கப்பட்டது!

தேவையற்றவர்களுக்கு அதை வீணாக்காதீர்கள்!

உங்களை உண்மையாக நேசிப்பவர்களுக்கு —
உங்கள் நேரம் கொடுங்கள்! ⏳
உங்கள் கவனம் கொடுங்கள்! 👁️
உங்கள் அன்பு கொடுங்கள்! 💛

தரமான மனிதர்கள் சிலர் போதும் —
அளவற்ற தேவையற்றவர்கள் வேண்டாம்!

5️⃣ மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் 🌿

சில விஷயங்கள் நமது கையில் இல்லை.
சில மனிதர்கள் நமக்கு உரியவர்கள் இல்லை.
சில தருணங்கள் திரும்பி வராது.

அதை மாற்ற முயன்று முயன்று சோர்வடையாதீர்கள்!

மழையை நிறுத்த முடியாது —
ஆனால் குடை பிடிக்கலாம்!

மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்வதே
மிகப்பெரிய வலிமை! 💪

6️⃣ உங்களுக்கு உரியதல்லாததை விட்டுவிடுங்கள் 🍂

இலை உதிர்வது மரத்தின் தோல்வி இல்லை —
அது புதுப்பிக்கப்படுவதற்கான தயாரிப்பு!

உங்கள் வாழ்க்கையிலும் சில விஷயங்கள் போகும் —
வேலை போகலாம்... உறவு முறியலாம்... கனவு தகரலாம்...

ஆனால் உங்களுக்கு உரியதல்லாதது போவது —
உங்களுக்கு உரியதற்கு வழி செய்கிறது!

விடுங்கள்... புதியது வரும்! 🌸

7️⃣ உங்களையே நேசியுங்கள் 💛

இதுதான் மிக முக்கியமான பாடம்!

மற்றவர்கள் உங்களை நேசிக்க வேண்டும் என்று காத்திருக்கிறீர்களா?
முதலில் நீங்களே உங்களை நேசியுங்கள்!

உங்கள் தோல்விகளை மன்னியுங்கள் 🙏
உங்கள் குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் 🤝
உங்கள் வலிமைகளை கொண்டாடுங்கள் 🎉
உங்களுக்காக நேரம் எடுங்கள் ⏰
உங்கள் கனவுகளை நம்புங்கள் ✨

உங்களை நீங்களே நேசிக்கும்போது —
உலகம் உங்களை நேசிக்கும்! 🌍

🔑 இன்றிலிருந்தே இந்த 7 உறுதிமொழிகளை எடுங்கள்:

✅ யாரையும் தேடி அலைய மாட்டேன்!
✅ யாரையும் கெஞ்சி வைத்திருக்க மாட்டேன்!
✅ என் மதிப்பை நானே அறிவேன்!
✅ முக்கியமானவர்களுக்கு மட்டுமே இடம் தருவேன்!
✅ மாற்ற முடியாததை அமைதியாக ஏற்போன்!
✅ என்னுடையதல்லாததை விட்டுவிடுவேன்!
✅ என்னையே நேசிப்பேன்! 💛

February 23, 2026

வயதான காலத்தில் - நன்றி திருமிகு.நியாண்டர் செல்வன்

"வயதான காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு இருந்து என்ன பலன்?" என பலர் கேட்பதுண்டு.

அவர்கள் என்ன கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் போட்டுவைத்துக்கொண்டு சும்மாவா இருக்கிறார்கள்? பூர்வீக வீடு, நிலம்னு அவர்கள் இருக்கும் சொத்தின் மதிப்பு ஏறியிருக்கும். 60 வயதில் ஓய்வுபெறுகையில் இருந்த போர்ட்போலியோ மதிப்பு, 70 வயதிற்கு மேல் பல மடங்கு உயர்ந்திருக்கலாம். அப்ப அவர்களுக்கு நிஜமாகவே உடம்பு முடியாமல் போயிருக்கலாம்.

அமெரிக்காவில் நர்சிங் ஹோம் எனும் முதியோர் பராமரிப்பு மையத்தில் தன் தந்தையைச் சேர்த்த ஒருவர் சொன்னார்:

"அங்கே எல்லாம் ஆண்டுக்கு ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் ரூ. 90 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குவார்கள். அங்கே வேலை செய்பவர்கள் எல்லாம் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் இளைஞர்கள். முதியோரை உணர்வுப்பூர்வமாகக் கையாள்வது எப்படி என்றே அவர்களுக்குத் தெரியாது. சும்மா கைவலி, கால்வலி என்றால் பெயின்கில்லரை கொடுத்துவிடுவார்கள். தூக்கம் வரலையா? பிடி தூக்கமாத்திரையை!

முதியவர்கள் டோனட், பீட்சா, கேக்னு எதை கேட்டாலும் கொடுப்பார்கள். நம்ம வீடாக இருந்தால் திட்டுவோம், 'உடம்புக்கு ஆகாது' என்போம். அங்கே அதெல்லாம் கிடையாது. அங்கே போனால் அவர்களுக்குத் தேவை நீங்கள் நீண்ட நாள் அங்கே ஆரோக்கியமாக உயிர்வாழ வேண்டும் என்பதெல்லாம் இல்லை; அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான். அங்கே சேர்ந்து நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. டிமாண்ட் அதிகம், வெயிட்டிங் லிஸ்ட் வேறு உண்டு. ஒருவர் சீக்கிரம் 'போய் சேர்ந்தால்' அந்த இடத்திற்கு அடுத்தவர் வருவார். நிறுவனத்திற்கும் லாபம், சில பிள்ளைகளுக்கும் பாரம் குறையும் எனும் மாடலில்தான் பல இடங்கள் இயங்குகின்றன."

இதுகுறித்து FIRE வாட்ஸாப் குழுவில் நான் எழுதியது:

வயதான காலத்தில் நிறைய சொத்தையும் காசையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஆண்டுக்கு ரூ. 90 லட்சத்தை ஏதோ ஒரு முதியோர் இல்லத்திற்கு தூக்கிக் கொடுப்பதை விட, உங்கள் வீடு, பங்குகள், சொத்து என உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்து உங்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். எடுத்தவுடனேயே மொத்த காசையும் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் பராமரிப்புக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஒரு பகுதியைத் தரலாம். உங்கள் காலத்திற்குப் பிறகு நீங்கள் இருக்கும் வீடு மற்றும் இதர சொத்துக்கள் அவர்களுக்குப் போகுமாறு செய்தால் போதும்.

பலரும் "என் பிள்ளைகள் என்னை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை, நான் சொந்தக் காலில் நிற்பேன்" என்று வீராவேசமாகப் பேசுகிறார்கள். ஆனால், முதுமையில் நிதி மோசடிகளில் சிக்குவது (Financial scams), டிமென்ஷியா (Dementia) போன்ற மறதி நோய்கள் வருவது போன்ற எதார்த்தங்களை அவர்கள் யோசிப்பதில்லை. குடும்பம் என்ற அமைப்பின் நோக்கமே ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான்.

பணம் இல்லாவிட்டாலும் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை என்றாலும், நாம் அவர்களுக்கு ஒரு நிதிச் சுமையாக (Financial burden) மாறிவிடக்கூடாது. அதேசமயம், பிள்ளைகளுக்குத் திருமணமாகிவிட்டால் அவர்களைத் தனிக்குடித்தனம் அனுப்பிவிடுங்கள். உங்களால் உங்கள் காரியங்களைச் செய்துகொள்ள முடியாத ஒரு காலம் வரும்போது மட்டும், அவர்கள் உதவி செய்தால் போதும்

~ நியாண்டர் செல்வன்

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா..?? (படித்ததில் பிடித்தது)

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா..??

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.

2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.

3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.

4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.

5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.

6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.

8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.

9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.

10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய் சுட்டிக் காட்டக் கூடாது...!!

தலைவர் தம்பி தலைமையில் - வியட்நாமிய முகநூல் பதிவு, தமிழ் மொழிபெயர்ப்பு உதவி திரு. சாட்ஜிபிடி

Bản dịch sang Tamil đơn giản:

இது திரு Tô Lâm அவர்கள் புத்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்கா சென்ற பயணம் பற்றியது.

பலர் வீட்டில் சும்மா உட்கார்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாட்டின் தலைவன் அமெரிக்கா செல்லும் இந்த பயணத்தின் நோக்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதற்காகத்தான்.

சிலர் இதை “பேச்சு சுதந்திரம்” என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையான பேச்சு சுதந்திரம் என்றால் கொள்கைகளை தர்க்கத்துடன் விமர்சிப்பது. ஒருவரின் முயற்சியை இகழ்வது அல்ல.

இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், பெரிய நாட்டின் தலைவரை சந்தித்து, வியட்நாமின் நிலைப்பாட்டை விளக்குவது. குறிப்பாக மாறிக்கொண்டிருக்கும் வரி கொள்கைகள் பற்றிப் பேசுவது.

சிலர் அவரது ஆங்கிலத் திறனை கேலி செய்கிறார்கள். ஆனால் சர்வதேச அரசியலில் மொழி என்பது ஒரு கருவி மட்டுமே. முக்கியமானது நாட்டின் சக்தி மற்றும் நிலை. ஆங்கிலம் நன்றாக பேசுவதால் மட்டும் பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்காது.

பல உலகத் தலைவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேசுகிறார்கள். அதனால் அவர்கள் பலவீனமானவர்கள் ஆகிவிட மாட்டார்கள். ஒரு நாடு பலமாக இருந்தால், மொழி பெரிய பிரச்சினையல்ல. ஒரு நாடு பலவீனமாக இருந்தால், எந்த மொழியிலும் பேசினாலும் பயன் இல்லை.

புதிய ஆண்டின் தொடக்க நாட்களிலேயே, எழுபதிற்கு அருகில் உள்ள ஒருவர் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்வது மதிக்கத்தக்கது. அது அவரது பொறுப்பு உணர்வை காட்டுகிறது.

ஒருகாலத்தில் வறுமையும் போராட்டங்களும் இருந்த நாடாக இருந்தாலும், இன்று வியட்நாம் உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. இப்போது வியட்நாம் குடிமக்கள் தன்னம்பிக்கையுடன் நிற்க முடிகிறது.

சிலர் உண்மையான முடிவுகளை விட, தாங்கள் புத்திசாலி என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் வரி மாற்றங்கள் நேரடியாக தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதிக்கலாம். அதனால் வெளிநாட்டு உறவுகள் மூலம் செய்யப்படும் முயற்சிகள் முக்கியமானவை.

இந்த பயணம் வெறும் ஒருவரின் பயணம் அல்ல. அது ஒரு நாட்டின் நலனுக்காக செய்யப்பட்ட முயற்சி.

தூரப் பயணம் ஏன்?
நாடு முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் Uber ஓட்டுகிறேன் - நன்றி வாட்சப்

நான் Uber ஓட்டுகிறேன். பெரும்பாலும் இரவு டியூட்டி. கடந்த வாரம் இரவு 11 மணிக்கு ஒரு முதியவரை எடுத்தேன். அவர் காரில் ஏறி,
“இன்றிரவு என்னை ஐந்து இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் உங்களுக்கு $500 தருகிறேன். காசாக. ஆனால் முடியும் வரை ஏன் என்று கேட்கக்கூடாது,” என்றார்.

ஐந்து முகவரிகள் கொடுத்தார்.

முதல் இடம்: புறநகர் பகுதியில் ஒரு வீடு.
அவர் காரிலேயே இருந்தார். அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே பத்து நிமிடம். அமைதியாக அழுதார்.
“சரி. அடுத்தது.” நான் ஓட்டினேன்.

இரண்டாம் இடம்: ஒரு ஆரம்பப் பள்ளி.
வெறிச்சோடியது. இருள். அவர் இறங்கி விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். ஒரு ஊஞ்சலில் அமர்ந்தார். இருபது நிமிடம் இருந்தார். திரும்பி வந்தார்.
“நான் இங்கே 43 ஆண்டுகள் கற்பித்தேன். என் வாழ்க்கையின் சிறந்த வேலை.”

மூன்றாம் இடம்: ஒரு டைனர் (சிறிய உணவகம்).
அவர் உள்ளே சென்றார். காபி ஆர்டர் செய்தார். ஒரு மேசையில் தனியாக அமர்ந்தார். குடிக்கவே இல்லை. சுற்றி பார்த்துக்கொண்டே இருந்தார். பதினைந்து நிமிடம். திரும்பி வந்தார்.

“என் மனைவியும் நானும் முதல் டேட்டுக்கு வந்த இடம் இது. 1967.”

நான்காம் இடம்: கல்லறை.
அவர் இறங்கி ஒரு கல்லறைக்கு சென்றார். அதற்குப் பக்கத்தில் நின்று பேசினார். என்ன சொன்னார் என கேட்க முடியவில்லை. முப்பது நிமிடம். திரும்பி வந்தபோது கண்கள் சிவந்திருந்தன.
“என் மனைவி. இன்று மூன்று ஆண்டுகள்.”

ஐந்தாம் இடம்: மருத்துவமனை.
“இது கடைசி,” என்றார். காரை நிறுத்தச் சொன்னார்.

“இப்போது நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா? எனக்கு நான்காம் நிலை புற்றுநோய். இன்னும் சில வாரங்கள். ஒருவேளை சில நாட்கள். இன்று இரவு என் வாழ்க்கையை முழுவதும் இன்னொரு முறை பார்க்க நினைத்தேன். முடியாத முன்.”

அங்கேயே நான் அழ ஆரம்பித்தேன்.

“அந்த வீடு – என் குழந்தைகளை வளர்த்த இடம்.
அந்த பள்ளி – என் வாழ்க்கையின் நோக்கத்தை கண்ட இடம்.
அந்த டைனர் – நான் காதலித்த இடம்.
அந்த கல்லறை – நான் விடைபெற்ற இடம்.

இங்கே இந்த மருத்துவமனை – இன்று நான் சேரப் போகும் இடம். ஹாஸ்பிஸ் வார்டு. நான் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்.”

அவர் $500 கொடுத்தார்.
“என் வாழ்க்கை முழுவதையும் என்னை ஓட்டி காட்டியதற்கு நன்றி. என்னிடம் இனிமையாக நடக்கும் கடைசி அந்நியர் நீங்கதான்.”

நான் பணத்தை மறுத்தேன்.
“இதை நான் எடுக்க முடியாது.”

அவர் வற்புறுத்தினார்.

“தயவு செய்து. இதை யாருக்கும் விட முடியாது. என் குழந்தைகள் என்னுடன் பேசுவதில்லை. நண்பர்கள் யாரும் இல்லை. நீங்க எனக்கு மூன்று மணி நேர அன்பு கொடுத்தீர்கள். அது $500-ஐ விட பெரியது.”

அவர் இறங்கினார். சிறிய சூட்கேஸ் எடுத்தார்.
“உங்க பெயர் என்ன?”
“மார்கஸ்.”
“நன்றி மார்கஸ். என் வாழ்க்கையின் கடைசி நல்ல விஷயம் நீங்கதான்.”

அவர் மருத்துவமனைக்குள் நடந்துசென்றார்.
நான் காரில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுதேன்.

அவரை மறக்க முடியவில்லை. மறுநாள் திரும்பிப் போனேன்.
“மிஸ்டர் பட்டர்சன். ரூம் 412.”
மலர்கள் எடுத்துச் சென்றேன். கதவைத் தட்டினேன்.
அவர் படுக்கையில் இருந்தார். என்னைக் கண்டு சிரித்தார்.
“மார்கஸ்… நீங்க வந்துட்டீங்க.”

“அப்படியே விட்டுவிட முடியவில்லை. நீங்கள் சுகமா?”
“இறக்கிறேன். ஆனால் நேற்று என் வாழ்க்கையை பார்த்துவிட்டேன். அதனால்… நான் நன்றாக இருக்கிறேன்.”

நாங்கள் இரண்டு மணி நேரம் பேசினோம்.
அவரது மனைவி. மாணவர்கள். பேசாமல் போன குழந்தைகள். வாழ்க்கை.

இரண்டு வாரங்கள் தினமும் அவரைச் சந்தித்தேன். காபி கொண்டு சென்றேன். செய்தி வாசித்தேன். சில சமயம் அமைதியாக இருந்தோம்.

“நான் தனியாக இறப்பேன் என்று நினைத்தேன்,” என்றார் ஒரு நாள்.
“ஆனால் நீங்க இருக்கிறீர்கள். ஒரு அந்நியர் குடும்பமாக மாறினார். அது ஒரு பரிசு.”

நான் அவரது கையை பிடித்தேன்.
“நீங்கள் இனி தனியாக இல்லை.”

அவர் அழுதார்.
“நன்றி. நான் தெரியாமல் போன நேரத்தில் என்னை பார்த்ததற்கு.”

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:17.
மிஸ்டர் பட்டர்சன் இறந்தார்.
நான் அங்கே இருந்தேன். அவரது கையை பிடித்தபடி.

அவரது கடைசி வார்த்தைகள்:

“மக்களிடம் சொல்லுங்கள். அந்நியர்களை உண்மையாகப் பாருங்கள். எல்லோரும் இறக்கிறார்கள். சிலர் வேகமாக. ஆனால் நாமெல்லாம் ஒரு பயணத்தில் இருக்கிறோம். அந்த வழியில் கருணையாய் இருங்கள். நீங்கள் கருணையாய் இருந்தீர்கள். என் கடைசி நாட்களை அழகாக்கினீர்கள்.”

அவர் கண்களை மூடியார்.
இதய மானிட்டர் நேர்கோடு.

அவரது இறுதிச்சடங்கில் ஆறு பேர் மட்டும்.
நான். மூன்று நர்ஸ்கள். ஒரு வக்கீல். ஒரு பழைய மாணவர்.

நான் பேசினேன்:
“ஒவ்வொரு அந்நியரும் ஒருவரின் முழு உலகம்.
ஒவ்வொரு பயணிக்கும் ஒரு கதை இருக்கிறது.

ஒவ்வொரு மனிதரும் யாராவது தங்களை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவர் எனக்கு $500 கொடுத்து தனது வாழ்க்கையை ஓட்டச் சொன்னார்.
ஆனால் அதைவிட பெரிய ஒன்றை தந்தார் – அந்நியரிடம் கருணை காட்டுவது கூடுதல் விஷயம் அல்ல. அதுவே எல்லாம்.”

அந்த $500 இன்னும் என் காரில் இருக்கிறது.
செலவிடவில்லை. நினைவாக வைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு பயணியும் கடைசி பயணமாக இருக்கலாம்.
ஒவ்வொரு அந்நியரும் கடைசி விடைபெறலாம்.

அதனால் நான் இப்போது வேறுபட்டபடி ஓட்டுகிறேன்.
கேட்கிறேன். கேட்கிறேன். பார்க்கிறேன்.

ஒரு முதியவர்…
ஒரு மென்மையான கடைசி இரவு…
ஒரு அந்நியர் தங்கியிருந்ததால்.

அந்த அந்நியராக நீங்களும் இருங்கள்.
இன்று யாரோ ஒருவரின் கடைசி பயணம் இருக்கலாம்.
அதை மென்மையாக்குங்கள்

“அமைதியான தருணங்கள்… ஆனால் சத்தமான உண்மைகள்.”
முன்னோக்கி அனுப்பப்பட்ட பதிவு — பகிர வேண்டிய மதிப்பு உள்ளது.
🙏🙏💖🙏🙏🙏🙏🙏

February 16, 2026

காஃபிர் - ஒரு மீள்பதிவேற்றம்

“காபிர்” என்ற சொல் தருகின்ற மெய்ஞ்ஞான தத்துவம்!

“காபிர்” என்ற அறபுச் சொல் யாரைக் குறிக்குமென்று ஆய்வு செய்து பார்ப்போம்.

இச்சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் பல பொருள் இருந்தாலும் முஸ்லிம்கள் இச்சொல்லை இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கே பயன்படுத்துகின்றார்கள்.

இலங்கையில் வாழும் பௌத மதத்தினரும், இந்து மதத்தினரும், கிறித்துவ மதத்தினரும் “கலிமா” சொல்லி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளாத காரணத்தினால் இவர்கள் அனைவரும் “காபிர்”கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொள்ளாத அனைவரையும் இச்சொல் குறிக்கும். இச்சொல் இவர்களை இழிவாகக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக இவர்களின் கொள்கையை சுட்டிக் காட்டும் பெயரே ஆகும். “வஹ்ஹாபீ” என்ற சொல் போன்று.

“காபிர்களின் உறவு கரண்டைக் காலின் கீழ்” என்று அவர்கள் பற்றிப் பேசும் முஸ்லிம்களில் சிலர் சொல்வதுண்டு. இந்த வசனம் அவர்களை இழிவாகக் காட்டும் வசனமென்று எண்ணியே முஸ்லிம்களிற் பலர் சொல்லி வந்துள்ளார்கள். அவர்களுடன் எந்த வகையிலும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்பதைக் கருத்திற் கொண்டே இவ்வசனம் பயன்படுத்தப்பட்டது. தற்போது இவ்வசனம் பாவிப்பதை முஸ்லிம்கள் நிறுத்தி விட்டார்கள். இதற்குக் காரணம் புரிந்துணர்வும், அறிவு வளர்ச்சியுமேயாகும்.

எனினும் நான் இவ்வசனத்தைக் காபிர்களை உயர்வாகக் காட்டும் வசனமென்றே கருதுகிறேன். ஏனெனில் “காபிர்களின் உறவு கரண்டைக் காலின் கீழ்” என்று சொல்வதற்கும், “காபிர்களின் உறவு காலின் கீழ்” என்று சொல்வதற்கும் வித்தியாசமுண்டு. “கரண்டைக் காலின் கீழ்” என்ற வசனம் காபிர்களுடனான உறவை முற்றாக முறித்துக் கொள்ளாமல் ஓரளவு உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும், “காலின் கீழே” என்ற வசனம் அவர்களுடனான உறவை முற்றாக முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் தரும். இதை கூரிய புத்தியுள்ளவர்கள் ஆய்வு செய்தால் இவ்வுண்மை துலங்கும்.

இவ்வாறு கூறிய இறைவன் மாற்று மதத்தினர் அனைவரையும் “காபிர்”கள் என்று குறிப்பிட்டுள்ளான். இச்சொல்லுக்கு நிராகரிப்பவன் என்று பொருள் வரும். இந்தப் பொருளுக்குரிய சொல்லை ஏன் அவர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது? என்பதற்கான காரணம் புரியாமலேயே முஸ்லிம்கள் இச்சொல்லை மற்ற மதத்தினருக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம்களிடம் நீங்கள் மற்ற மதத்தினரை “காபிர்”கள் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அவர்கள் இறைவனை மறுக்கின்றார்கள், அவனை நிராகரிக்கின்றார்கள் என்று சொல்வார்கள்.

மதமொன்றைப் பின்பற்றி நடக்கும் ஒருவன் எந்த வகையிலும் இறைவனை நிராகரிக்கவோ, மறுக்கவோ மாட்டான். அதேபோல் இறைவனை மறுப்பவன் எந்தவொரு வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபடவுமாட்டான். பௌத மதத்தைச் சேர்ந்தவன் விகாரைக்குச் செல்லவுமாட்டான். இந்து மதத்தைச் சேர்ந்தவன் கோயிலுக்குச் செல்லவுமாட்டான். கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவன் தேவாலயத்திற்குச் செல்லவுமாட்டான். இவர்கள் தமது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதே இவர்கள் இறைவனை மறுக்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.

இறைவனை முற்றாக நிராகரிப்பவன் “முல்ஹித்” என்று அழைக்கப்படுவான். தமிழில் நாத்திகன் என்று சொல்லப்படுவான். இவனுக்குப் பள்ளிவாயலுமில்லை, விகாரையுமில்லை, தேவாலயமுமில்லை, கோவிலுமில்லை. இவன் ஒன்றிலும் அடங்காதவன். இவன் பற்றி எந்தவொரு கருத்தும் நான் சொல்வதற்கில்லை.

பொதுவாக பௌதர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகியோரை “காபிர்” நிராகரிப்பவர்கள் என்று அழைப்பதற்கான காரணம் அவர்கள் இறைவனை நம்பினாலும்கூட அவனே சர்வ சிருட்டிகளாகவும், படைப்புக்களாகவும், மற்றுமுள்ள சீவ ராசிகளாகவும், பறப்பன, நடப்பன, ஊர்வன அனைத்துமாயும் உள்ளான் என்பதை நிராகரிப்பவர்களாக உள்ளதேயாகும்.

நன்றி : இசுலாமிய வலைதளம் SHUMS

February 15, 2026

அவரவர் மார்க்கம் - திருக்குர்ஆன்

"அவரவருக்கு அவரவர் மார்க்கம்" (Lakum deenukum waliyadeen) என்பது திருக்குர்ஆனின் 109-வது அத்தியாயமான (ஸூரா காஃபிரூன்) 6-வது வசனத்தில் இடம்பெற்றுள்ளது. இது நம்பிக்கை சுதந்திரம், சமய நல்லிணக்கம் மற்றும் மற்றவர்களின் வழிபாட்டு முறைகளை மதிக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது.
முக்கிய அம்சங்கள்:
  • மத சுதந்திரம்: ஒருவர் தனது கொள்கையை பின்பற்றுவதில் உரிமை உண்டு, மற்றவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
  • சமய நல்லிணக்கம்: மார்க்க விஷயங்களில் முரண்பாடுகள் இருந்தால் தர்க்கம் செய்யாமல், அவரவர் நம்பிக்கையின்படி வாழ விடுவது.
  • வசைபாடாமை: பிற மதத்தவர்களின் தெய்வங்களை வசைபாடக் கூடாது என திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
இது முஸ்லிம்கள் தங்களின் கொள்கையில் உறுதியாக இருப்பதோடு, பிற மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சகிப்புத்தன்மையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

February 14, 2026

Zen ஜென் Osho ஓஷோ


ஒரு ஸென் குருவிடம் 
சீடர் ஒரு கேள்வி கேட்டார்.

*"நாம் ஏன் இவ்வளவு துயரப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?"* 

*அவர் "அதோ அந்த சைப்ரஸ் மரத்தைப் பார்.!"என்றார்.*

கேட்டவர் காட்டிய மரத்தைப் பார்த்தார். "எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!"

"மறுபடி பார்.! அந்த மரத்திற்கு அருகே ஒரு ரோஜாச் செடி இருக்கிறது.
அந்த ரோஜாச் செடி நான் ஏன் குட்டையாக  இருக்கிறேன்  என்று எப்போதும் புகார் செய்ததில்லை."

"அந்த சைப்ரஸ் மரமும் 
ரோஜாக்களை பார்த்து 
நான் மிக உயரமாக வளர்ந்தும் ஏன் என்னிடம் ரோஜாப் பூ மலர்வதில்லை என்று கேட்பதில்லை.

காலை நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.இரவு நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.
ரோஜாச் செடியோ சைப்ரஸ் மரமோ வருந்தி அழுவதை நான் கேட்டதில்லை."

இரண்டும் தாம் எப்படி இருக்கின்றனவோ அதில் திருப்தியோடு இருக்கிறது  
அங்கே ஆழ்ந்த அமைதிதான் இருக்கிறது.

ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை. 
உயர்ந்தது எது தாழ்ந்தது எது என்ற விசாரணை இருப்பதில்லை."

ஒப்பிடாத_வரையில் 
வாழ்வில்_பிரச்சினையில்லை. 
ஒப்பிடாத_போது 
வாழ்வு_மிகவும்_அழகானது .

*--ஓஷோ--*

February 13, 2026

அதிசய மானுடன், டெய்ஸி ராணி


*அதிசய மானுடன்*

எங்கோ பொழிய
திரண்ட மேகம்
போகிற போக்கில் 
நிலம் நனைத்து...
அதில் துளிர்ப்பது போல் 
நின் தலைமையில் கவிபாடி
கொஞ்சம் துளிர்த்தவள்
என்கிற வகையில்
கவிக்கோவே 
உம்மை வணங்குகிறேன்!

உருது விதையில்
தமிழாய் முளைத்து
தழைத்தவன் நீ!

உன் அப்பனும் பாட்டனும்
அன்றய அவைக் கவிஞர்கள்
அவர்களுக்கும் மேல் வந்த
சுப்பன் கவிஞன் நீ!

ஐவேளை தொழுகையோடு
ஆறுவேளை
ரூமியின் மஸ்னவிக்குள்
தன்னை புடம்போட்டுக்கொண்ட
தங்கம் நீ!

மாணவர்களின் "கவிராத்திரியில்"
கண்விழித்து ஒளிபாய்ச்சிய
ஒற்றை நிலவு நீ!

அரங்க கவிதைகளின்
தொணியை மாற்றி
ரசிகர்களுக்கு தூண்டில் போட்ட
ரசனை கவிஞன் நீ!

கவிதைகளில் 
ஹைக்கூ நீ!

ஏதேன் தோட்டத்தை
வாணியம்பாடிக்கே வரவைத்தவன்
இங்கே விளைந்த ஆப்பிள்கள்
கருநாகங்களையே 
கவிதைகளால் காவுவாங்கியவை!

மீன்கொடி நாட்டில் பிறந்து
தோல் தொழில் கொடிகட்டிப்பறக்கும்
ஊருக்குள் வசித்ததால் தான்
மத்தளத்தின் இசையிலும்
செத்த மாட்டின் தோல்
தெரிந்தது உமக்கு!

ஆறாம் விரலாய்
என் பேனா என்ற
ஏழாம் அறிவின்
உச்சம் நீ!

கடைசிப்பக்கம் இல்லாத
துப்பறியும் நவீனத்தை
யாருக்கும் தெரியாமல் படிப்பதுதான்
வாழ்க்கை என்றுச் சொன்ன
வார்த்தை ஜாலன் நீ!

ப(ர்)க்ளி பல்கலைகழகத்தில்
தமிழை
அட்டணங்கால் போட்டு அமரவைக்க
தமிழிருக்கை செய்த
தச்சன் நீ!

நீ படித்த ஆறு ஆண்டுகள்தான்
இந்தக் கல்லூரியின் பொற்காலமென
அறிந்தவர்கள் சொல்லுவர்
அதை நீயும் சொல்லி இருக்கிறாய்
இருக்காதா பின்னே...?
பின்னாளில் நீ பெற்ற
"கோ" பட்டத்திற்கு காரணம்
அந்த நற்காலம் தானே!

கட்டுரை கதைகளுக்குத்தான்
உயரிய விருதென்பதை
உடைத்தெறிந்து
கவிதைக்கும் 
ஆலாபனை செய்யவைத்த
அற்புதன் நீ!

அம்மி கொத்த சிற்பி எதற்கு...? என
வெள்ளித்திரையை 
விரல்களால் நீக்கிய
ஞானி நீ!

இசையை காதலித்துவிட்டு
கவிதையை திருமணம் செய்தேன் என
பார்ப்பவர்களிடமெல்லாம்
புலம்பிய உனக்கு
இசைஞானி
எடுத்துச் சொன்னது உண்மைதான்...
"அவள் தான் இவள் என"
அதற்கு மேலும்
நான் ஒன்று சொல்கிறேன்
காதலி மனைவியானால்
உன் காது போயிருக்கும்
மனைவி 
காதலியாகவே இருப்பதால்தான்
உன் கவிதைகளை கேட்கிறாள்!

நீயும் பனையூரில்தான் 
இருந்திருக்கிறாய் ..(2)
சொல்லவே எவ்வளவு பெருமை!
நாலும் இரண்டும் படித்து
சொல்லரசன் ஆனாய்...

இப்பொழுது பனையூர் என்றாலே
பகீர்... என்கிறது...
நாற்பத்து இரண்டுதான்
அடிவயிற்றில் அனல் பாய்ச்சுகிறது!

நிச்சயமாய் நான்
வழிபாட்டுத்தளங்களில் 
இருக்கவே மாட்டேன் என்று
இவரிடம் கடவுள் சொன்னதை
இம்மி பிசகாமல்
நம்மிடம் சொன்னார் தானே??

(கேட்காமல்)
தெற்கிலிருக்கும் 
வழிகாட்டிக் கற்களையெல்லாம் 
திரியாய் திரிக்கிறார்கள்
வடக்கே நின்று கொண்டு!

முத்தமிழ் அறிஞர் கலைஞர்
சன்மானமாய்
நீ வேண்டுமென்ற 
தன்மானக் கவிஞன் நீ!

இலைக்கு முன்
மண்டிபோட்டவர்களை
நாம் பார்த்திருக்கிறோம் (2)
மரத்தினை உயர்திணையாக்கி
மனிதனை மண்டிபோடவைத்த
அதிசய மானுடன் நீ!

ஜோ. டெய்சிராணி
11/2/2026

50ல் வாழ்வின் தொடக்கம்

*ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்...* 

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...

வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்... 50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்...

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்...

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்...

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,

சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்... முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை.

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...?

சாதித்தவர்கள் கோடிகளில் ஒருத்தராக இருக்கலாம். அதற்காக இந்த காலகட்டத்தில் கையில் இருப்பு உள்ளதை சவாலாக எடுத்துக்கொண்டு பதினைந்து, இருபத்தைந்து லட்சங்களை தொலைத்தவர்களில் நானும் ஒருவன். உங்களுடைய இந்த பதிவு கல்லூரி படிப்பு முடித்தவர்களுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கும்.

பெற்றோரின் கண்காணிப்பில் சவாலாக ஏதேனும் ஒரு வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டாலும் ஆறுதல் சொல்ல தாய் தந்தையர் இருப்பாங்க. ஐம்பது வயதிற்கு மேற்கொண்டு சவாலே சமாளி என்று பார்த்து, இழப்பு ஏற்பட்டால் முதலில் திட்டுவது மனைவியும் பிள்ளைகளும் தான்.